Published : 09 Apr 2015 10:17 AM
Last Updated : 09 Apr 2015 10:17 AM

2 புதிய ரக ஸ்மார்ட்போன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை நேற்று அறிமுகம் செய்தது. மைக்ரோ சாப்ட் லூமியா 640 எக்ஸ்எல் மற்றும் மைக்ரோசாப்ட் லூமியா 640 என்ற பெயரிலான இந்த ஸ்மார்ட்போன்கள் இரண் டுமே இரட்டை சிம் வசதி கொண் டவை.

அலுவலகம், வீடு ஆகிய இரண்டிலும் மிகச் சிறப்பாக செயலாற்றும் வகையில் இந்த ஸ்மார்ட்போன்கள் வடிவமைக்கப் பட்டுள்ளதாக நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தென் பிராந்திய இயக்குநர் டி.எஸ். ஸ்ரீதர் தெரி வித்தார்.

இவை இரண்டுமே மைக்ரோ சாப்ட் 8.1 இயங்குதளத்தில் செயல் படக் கூடியவை. அத்துடன் சிறப்புச் சலுகையாக 12 மாதங்களுக்கான ஆபிஸ் 365 சாப்ட்வேர் இலவசமாக அளிக்கப்படுகிறது. இவை இரண் டிலுமே ஒன் டிரைவ் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது.

எடிட், வேர்டு பகிர்தல், எக்ஸெல், பவர்பாயிண்ட் டாகு மெண்ட், ஒன் நோட் ஆகியன நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்களுடனேயே இருக்கும். இதற்கு வசதியாக இதில் ஆபிஸ் சூட் சாப்ட்வேர் முன்னதாகவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஸ்கைப் இண்டக்ரேஷன் வசதி, முன்புற அகலமான கேமரா ஆகியன லூமியா 640 மற்றும் லூமியா 640 எக்ஸ்எல் ஆகிய இரண்டு மாடல்களில் வந்துள்ளன. இணையதளம் மற்றும் ஆப்ஸ் தவிர விளையாட்டுகளுக்கான ஆப்ஸ்களும் உள்ளன. இவற்றுக்கு வசதியாக இதில் 1 ஜிபி நினைவகம் மற்றும் அதிக செயல்திறன் மிக்க குவாட் கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது.

புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியன ஹெச்டி டிஸ்பிளேயில் தெளிவாக பார்ப்பதற்கு வசதியாக 5 அங்குல திரை லூமியா 640 யிலும் 5.7 அங்குல திரை லூமியா 640 எக்ஸ்எல்லிலும் உள்ளது. வீடு மற்றும் அலுவலகத்திலும் செயல்படுவதற்கு ஏற்ப நீண்ட நேரம் நீடித்திருக்கும் பேட்டரி 2500 எம்ஏஹெச் பேட்டரி லூமியா 640 மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி லூமியா 640 எக்ஸ்எல்லில் உள்ளது.

மிகத்தெளிவான அழகிய புகைப்படம் எடுப்பதற்கு 8 எம்பி கேமரா லூமியா 640 ஸ்மார்ட்போனிலும் 13 எம்பி கேமரா ஸெயிஸ் ஆப்டிக்ஸுடன் லூமியா 640 எக்ஸ்எல்லிலும் எல்இடி பிளாஷ் வசதி மற்றும் லூமியா கேமரா சாப்ட்வேருடன் வெளிவந்துள்ளது. லூமியா 640 மற்றும் லூமியா 640 எக்ஸ்எல் ஆகிய இரண்டு மாடல்களுமே 3ஜி டியூயல் சிம் வசதியோடு வெளிவந்துள்ளன.

இது தவிர, லூமியா 640 எக்ஸ்எல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் கேஷ் பேக் சலுகை ரூ. 1,000 வரை வழங்கப்படும். குறைந்தபட்சம் ரூ. 200 வீதம் 5 மாதங்களுக்கு இந்த ரீசார்ஜ் சலுகையைப் பெறலாம்.

இத்துடன் ஓலா கேப்ஸ் நிறுவனம் ரூ. 800க்கு கேஷ்பேக் சலுகையை ஒலா மணி ரீசார்ஜ் மூலம் அளிக்கிறது.

இந்த சலுகையை ரூ.200க்கு மேலான பயணத்தின் போது நான்கு முறை பயன்படுத்திக் கொள்ள முடியும். அல்லது ரூ. 500க்கு மேலான பயணத்தின்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

லூமியா 640 ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் மூலம் மட்டுமே பெறலாம். லூமியா 640 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் அனைத்து விற்பனையகங் களிலும் கிடைக்கும்.

இதன் விலை ரூ. 15,799. மற்றும் லூமியா 640 ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் மட்டும் பிரத்யே கமாகக் கிடைக்கும். இதன் விலை ரூ. 11,999 ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x