Published : 01 Apr 2015 10:02 AM
Last Updated : 01 Apr 2015 10:02 AM

வரி செலுத்தாதவர்கள் பெயர்களை வெளியிட்டது வருமான வரித்துறை

வருமான வரி செலுத்தாதவர்கள் பெயர்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக இதில் 18 நபர்கள் மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாமல் உள்ளதாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே இவர்களின் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்போது பொதுத்தளத்தில் வெளியிடும் போது பொது மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

வரி செலுத்தாதவர்கள் குறித்த புள்ளி விவரங்களை செவ்வாய் கிழமை செய்திதாள்களில் வெளி யாகி உள்ளது. இதில் கோல்டுஷக் டிரேட், சோமானி சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும். இவர்களை தகுதி இருந்தும் வரி செலுத்தாதவர்கள் என வருமன வரித்துறை அறிவித் துள்ளது.

இணையதளத்தில் வெளி யிடப்பட்ட 18 நபர்களில் 11 நபர்கள் குஜராத்தைச் சேர்ந்த வர்கள். இவர்களுக்கு வருமான வரியை உடனடியாக செலுத்தச் சொல்லி பலமுறை வலியுறுத் தப்பட்டுள்ளது.

முதல் முறையாக வருமான வரித்துறை 10 கோடி மற்றும் அதற்கு மேலும் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

நேற்று வெளியிட்ட பட்டியலில் சோமானி சிமென்ட் ரூ.27.47 கோடி, புளூ இன்பர்மேஷன் டெக்னாலஜி ரூ.75.11 கோடி, ஆப்பிள்டெக் சொல்யூஷன் 27.07 கோடி, ஜூபிடர் பிசினஸ் ரூ.21.31 கோடி, ஹிராக் பயோடெக் ரூ.18.54 கோடி வரி செலுத்தாதவர்கள் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் குஜராத்தைச் சேர்ந்த பயோ பார்மா அண்ட் ஹெல்த் கேர் ரூ17.69 கோடி, பன்யன் அண்ட் பெர்ரி அல்லாய்ஸ் ரூ.17.48 கோடி, லஷ்மிநாராயணன் டி டாக்கர் ரூ.12.49 கோடி, விராக் டையிங் அண்ட் பிரிண்டிங் 18.57 கோடி, பூனம் இண்டஸ்ட்ரீஸ் ரூ15.84 கோடி குன்வர் அஜய் புட்ஸ் ரூ.15 கோடி வரி செலுத்தாமல் உள்ளனர்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிறுவனமான கோல்ட் ஷக் டிரேட் இந்தியா நிறுவனம் ரூ.75.47 கோடியும், கொல்கத்தாவைச் சேர்ந்த விக்டர் கிரடிட் அண்ட் கன்ஸ்ட்ரஷன் நிறுவனம் ரூ13.81 கோடியும் , மும்பையைச் சேர்ந்த நோபல் மெர்சண்டைஸ் ரூ11.93 கோடியும், புனேவை சேர்ந்த ஜிகே தரணி நிறுவனம் ரூ.38.31 கோடியும் வரி செலுத்தாதவர்கள் பட்டியலில் உள்ளனர் என்று வருமான வரித்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x