Published : 14 Apr 2015 12:14 PM
Last Updated : 14 Apr 2015 12:14 PM

இவரைத் தெரியுமா?- பாதிஹ் பிரோல்

n சர்வதேச எரிசக்தி அமைப்பின் (ஐஇஏ) தலைமைப் பொருளாதார நிபுணர்.

n 2015 பிப்ரவரியிலிருந்து இந்த பதவியில் இருக்கிறார். எரிசக்தி துறை சார்ந்த கொள்கைகளை வகுப்பதில் வல்லுனர்.

n ஐஇஏ எரிசக்தி வர்த்தகக் கவுன்சில் நிறுவனர் மற்றும் தலைவர். உலக பொருளாதார மன்றத்தின் எரிசக்தித் துறை ஆலோசகர்.

n எரிசக்தித் துறையில் உலகின் சக்தி வாய்ந்த ஏழு மனிதர்கள் பட்டியலில் இவரையும் போர்ப்ஸ் அடையாளப்படுத்தியுள்ளது.

n சர்வதேச அளவில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை தாக்கல் செய்துள்ளார்.

n எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான (ஒபெக்) அமைப்பிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

n துருக்கியைச் சேர்ந்தவர். பவர் என்ஜீனியரிங்கில் இளநிலை பட்டமும், வியன்னா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் பட்டமும், ஆராய்ச்சி படிப்பும் முடித்தவர்.

n எரிசக்தித் துறை கொள்கைகளை வகுப்பவர். `கோல்டன் ரூல்ஸ் பார் கோல்டன் ஏஜ் ஆப் காஸ்’ என புதிய எரிசக்தி கொள்கையை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x