

பலசரக்கு துறையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிக் பேஸ்கட் சென்னையில் தனது வர்த்தகத்தை தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹரி மேனன்.
பெங்களூருவைச் சேர்ந்த இந்த நிறுவனம் காய்கறிகள் மற்றும் வீடுகளுக்குத் தேவையான பலசரக்கு பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறது.
பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், மற்றும் புனே நகரங்களில் இந்த நிறுவனம் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறது. பிராண்டட் பொருட்கள் தவிர உள்ளூர் அளவிலான லோக்கல் பிராண்டுகளும் கிடைக்கும் என்றார். மேலும் ஆன்லைன் மூலமாகவும், ஆப்ஸ் மூலமாகவும் ஆர்டர்கள் கொடுக்க முடியும் என்று கூறினார்.
உள்ளூர் அளவிலான தொழில்களில், சென்னை நகரம் முக்கிய சந்தையாக இருப்பதால் தொழிலை விரிவுபடுத்துகிறோம் என்று ஹரி மேனன் குறிப்பிட்டார்.