

அரசு மற்றும் தனியார் நிறுவ னங்கள் கல்விக்கு அதிக முக்கியத் துவம் கொடுத்து செலவு செய்ய வேண்டும் என்று ஹெச்.டி.எப்.சி.யின் தலைவர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.
இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் கல்விக்காக நாம் முதலீடு செய்வது ஜிடிபியில் வெறும் 3 சதவீதம்தான். உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா.
அதனால் கல்வியில் முதலீடு செய்யும் போதுதான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றார். குர்கானில் தன்னுடைய தலைமையில் தொடங்கப்படும் முதல் பள்ளியான ஹெச்.டி.எப்.சி. பள்ளியின் தொடக்க விழாவில் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தபோதிலும், இந்தியாவில் கல்விக்கான தேவை உயர்ந்துகொண்டே வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இந்தியாவில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வில்லை. காரணம் அனைவ ருக்கும் சரியான கல்வி கிடைக்கவில்லை. அதனை தீர்க்கும் முயற்சிதான் இந்த பள்ளி என தீபக் பரேக் தெரிவித்தார்.
ஒரு மாணவனின் முதல்படி பள்ளிதான். சிறந்த கல்வி கொடுப் பதே ஹெச்.டி.எப்.சி. பள்ளியின் நோக்கம் என்றார்.
இந்த பள்ளி வரும் 2015-16 கல்வி ஆண்டு முதல் செயல்பட தொடங்கும்.
இந்த பள்ளி சிறந்த கல்வி யாளரான அனிதா மக்கார் தலை மையில் செயல்படும் என்றார்.
இந்தியாவில் இருக்கும் பள்ளிகளில் 8 சதவீதம் தனியார் பள்ளிகளாகும். ஆனால் படிக்கும் மாணவர்களில் 40 சதவீதம் தனியார் பள்ளியில்தான் படிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஹெச்டிஎப்சி பள்ளி மூலம் கல்வித் துறையில் ஒரு சிறிய மாற்றத்தை தொடக்கி வைக்கிறோம். அனைவருக்கும் தரமான கல்வியை கொடுக்க நினைக்கும் ஒரு சிறிய முயற்சிதான் இது என்று அனிதா மக்கார் தெரி வித்தார்.
நடுத்தர மக்களுக்கு வீட்டுக் கடனை வழங்கியதில் முன்னோடி யான ஹெச்டிஎப்சி வங்கி, தரமான கல்வியை அனை வருக்கும் சென்று சேர்ப்பதற்கான வேலையை தொடங்கி இருக்கிறது என்றார்.
வீட்டுக்கடன் கொடுப்பதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஹெச்.டிஎப்சி ஆகும். கடந்த 37 வருடங்களாக 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக்கடன் கொடுத்திருக்கிறது. இந்த குழுமத்துக்கு 5.5 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கி றார்கள்.