Published : 29 Mar 2015 11:25 AM
Last Updated : 29 Mar 2015 11:25 AM

வணிக நூலகம்: உன் வாழ்க்கை உன் கையில்!

பெரியதொரு ரெஸ்டாரெண்டில் ஒரு வர் ஒரு டேபிளில் அமர்ந்துள் ளார். ஏதோ யோசனையாக இருக்கிறார். வெயிட்டர் வந்து அவரிடம் சார் என்ன யோசனை. எல்லாம் நல்லா இருக்கின்றதுதானே என்று கேட்கின்றார். சாப்பிட வந்தவருக்கு அந்த வெயிட்டர் கடவுள் என்று தெரிகின்றது. மாறுவேஷத்தில் வந்துள்ளார் போலும். தலையை இப்படியும் அப்படியுமாய் ஆட்டி இல்லவே இல்லை. எதுவுமே நன்றாக இல்லை. நான் ஆர்டர் செய்தது எதுவுமே எனக்கு தரப்படவில்லை. சந்தோஷத்தையும் வெற்றியையும் ஆர்டர் செய்திருந்தேன். எக்கச்சக்கமாய் பணம் ஆர்டர் செய்திருந்தேன். கொஞ்சம் ஒல்லியாய் இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

நீங்கள் கேட்டதால் சொல்கின்றேன் நல்ல நட்பு, சூப்பரான ஒரு கார், என் மேல் பைத்தியமாய் இருக்கும் மனைவி போன்றவற்றையும் ஆர்டர் செய்திருந்தேன். நான் குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் பேசவேண்டும் என்றும் நினைத்திருந்தேன். அப்புறம் உலகத்தை ஒரு ரவுண்டு வரவேண்டும் எனவும் நினைத்திருந்தேன். எதுவும் வரவில்லை. அப்புறம் எப்படி நல்லா யிருக்கும் என்றாராம். கடவுளோ அவ ரிடம், அட இதையெல்லாம் கிடைக்கத் தோதான வகையில் உன்னை மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே! உங்கள் வாழ்க்கையை எந்த நிமிடமும் உங்களுக் குத் தேவையானதைப் போல் மாற்றிக் கொள்ளலாமே என்று கேஷுவலாகச் சொன்னாராம். சட்டென கடவுள் சொன் னதை புரிந்துகொண்டாராம் சாப்பிட வந்தவர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வெயிட்டர் மறைந்துவிட்டாராம் என்ற கதையுடன் ஆரம்பிக்கின்றது இந்தப் புத்தகம்.

ஒரே ஒரு அட்வைஸ்!

உங்களுக்கு 102 வயது. பத்து நாட் களுக்கு முன்புதான் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலை உடைத்துக்கொண்டு ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக ஆகிவிட்டீர்கள். இப்பவோ அப்பவோ என்று இருக்கின்றது நிலைமை, உங்கள் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் உங் களுடைய நெருங்கிய உறவினர்கள் அத்தனைபேரும் அணிவகுத்து நிற்கின் றனர். திடீரென கோட் சூட் போட்ட இளைஞர்கள் சிலர் உங்கள் ரூமுக்குள் வருகின்றனர். மன்னிக்கணும். நாங்கள் ரொம்ப தொலைவில் இருந்து வருகின் றோம். உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும். வாழ்க்கையிலும் பிசினசிலும் வெற்றிபெற நீங்கள் சொல்ல விரும்பும் ஒரே ஒரு அட்வைஸ் என்ன என தெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றோம் என்கின்றனர்.

உங்கள் கண்ணில் ஒளி வட்டம். அந்த அட்வைஸை நீங்கள் சொல்ல ஆரம்பிக்க நினைக்கும் போது உங்கள் இருதயம் அடைக்கின்றது. உயிர் பிரியபோகின்றது என்பது உங்களுக்கு தெரிகின்றது.

இதுதான் கடைசி மூச்சு. அதற்குள்ளாக ஒரே ஒரு அட்வைஸ் சொல்லவேண்டும். எதைச் சொல்வீர்கள் என அதிரடியாக ஆரம்பிக்கின்றது ‘யூ கேன் சேஞ்ச் யுவர் லைப் எனி டைம் யு வாண்ட்’ எனும் ராபின் சீகர் எழுதிய புத்தகம்.

எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தால் நான் என்ன சொல்வேன் தெரியுமா?, பிடித்த விஷயத்தை மட்டுமே செய்யுங்கள் என்பதைத்தான் என்று சொல்கிறார் ராபின். இது ஒன்றை மட்டும் சொன்னால் போதுமென்று நினைத்தாலும் இன்னும் சிலவற்றைச் சேர்க்க விரும்புகின்றேன் என்று சொல் லும் ராபின் உங்கள் கனவுதனை எந்த ஒரு நேரத்திலும் கைவிட்டுவிடாதீர்கள், உங்களை நம்புங்கள், பாசிட்டிவ்வாக இருங்கள், அடுத்தவர்கள் மீது அன்பு செலுத்துங்கள், அந்த அன்பு என்பது கண்டிஷன்ஸ் அப்ளை என்ற சட்டதிட் டத்துடன் இல்லாமல் பார்த்துக்கொள் ளுங்கள் என்பதையும் சேர்த்துச் சொல்ல விரும்புகின்றேன் என்கின்றார்.

நமக்கு தேவையான அனைத்தை யுமே கையில் எடுத்துக்கொண்டுதான் நாம் இந்த பூவுலகில் அவதரித்துள் ளோம். ஆனால் பாருங்கள் அதை எப்படிப் பெறுவது மற்றும் உபயோகிப் பது என்பது குறித்த கையேடு (யூசர் மேனுவல்) இல்லாமல் வருவதுதான் பிரச்சினையே என்று கிண்டலடிக்கின்றார் ராபின்.

சிந்தியுங்கள்!

எந்த விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டும், எந்த விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும், எந்த விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். முதலாவதாக சிந்தியுங்கள் என்று சொல்லும் ராபின் உங்கள் மூளை நீங்கள் எதிர்கொள்ளும் அத்தனை சவால் களையும் தீர்ப்பதற்கான வழிகளைச் சொல்லும் சக்தி கொண்டது என்பதை உணருங்கள் என்கின்றார். ஆனால் பாருங்கள் மூளை கம்ப்யூட்டரைப் போன் றது. அதனுள் தேவையான ப்ரோக்ராமை எழுதி செயலாக்கினால் மட்டுமே சரியான ரிசல்ட்களை காண்பிக்கும். சிந்தனை என்ற ப்ரோகிராமினால் மட்டுமே சரியான ரிசல்ட்களைப் பெறமுடியும் என்கின்றார் ராபின்.

நம்முடைய மொத்த சக்தியுமே நம்முடைய எண்ணங்களால் வடிவமைக் கப்பட்டு உருவாக்கப்படுவது என்று சொல்லும் ஆசிரியர் ஒரு மனிதன் ஒரு விஷயத்தை அடைவதும் அடையாமல் இருப்பதும் அவன் சிந்தனையாலேயே சாத்தியமாகின்றது என்கின்றார். ஆனால், நிஜத்தில் நாம் என்ன செய்கின்றோம். நம்முடைய மூளையை நாம் சிந்திக்க உபயோகிப்பதேயில்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றே இருக்கின்றோம். பார்த்ததையும் கேட்டதையும் அப்படியே நம்பிவிடுகின்றோம்.

நம்மால் இதையெல்லாம் கண்ட்ரோல் செய்ய முடியாது என நாமே ஒரு யூகத்தை செய்து அதன்படியே செயலாற்றுகின்றோம். இது இப்படித் தான் என்று ஒரு விஷயத்தை நாமாகவே சித்தரித்துக்கொண்டு சிந்திக்காமல் வாழ்கின்றோம். இந்தவித வாழ்க்கையே நாம் இப்படி இருப்பதற்கு காரணம். ஆனால், சீரிய முயற்சி எடுத்தால் நம்மால் நம்மை மாற்றிக்கொள்ள முடியும் என்கின்றார் ராபின்.

அதே போல் நமக்கு வில்-பவர் இல்லை என்று நாமாகவே முடிவு செய்துவிடுகின்றோம். அது உண்மையில்லை. அனைவரிடமும் வில்-பவர் இருக்கவே செய்கின்றது. அதை உபயோகித்து காரியத்தை கைகூட வைக்கும் திறன்தான் நம்மை வெற்றியடைய வைக்கின்றது. அதை நம்முடைய சிந்தனையால் பெற்றாலே போதுமானது. ஒன்று உங்கள் சிந்தனையை நீங்கள் உருவாக்குங்கள். அல்லது உங்கள் சிந்தனை உங்களை உருவாக்கிவிடும் என்கின் றார் ராபின்.

வாழ்க்கையில் வெற்றி என்பது எப்படி நாம் முயற்சிசெய்கின்றோம் என்பதில் இல்லை. எப்படி சிந்தனை செய்கின்றோம் என்பதில்தான் இருக்கின்றது என்று அடித்துச்சொல்கின்றார் ராபின். சிந் தித்தே ஆகவேண்டும் என்பதை உறுதியாகச் சொல்லும் ஆசிரியர் அதைச் செய்வது ஒன்றும் சாமான்யமான காரியமில்லை என்றும் சொல்கின்றார். ஒரு ஸ்மார்ட் போன் வாங்குகின்றீர்கள். விலை உயர்ந்தது. என்ன செய்யவேண் டும். முதலில் கேட்லாகை படித்து அதன்படி நடக்கவேண்டும். ஆனால், என்ன செய்கின்றோம். முதலில் ஆன் செய்கின்றோம். இடைஞ்சல் வந்தால் நண்பர்களைக் கேட்கின்றோம். ஆனா லும் கையில் இருக்கும் கேட்லாக்கை (அது போனின் உள்ளே இருந்தாலுமே) படிக்க மாட்டேன் என்கின்றோமே அதேபோல்தான் சுய சிந்தனை என்பதை செய்ய மாட்டேன் என பெரும்பாலானோர் அடம்பிடிக்கின்றனர் என்கின்றார் ராபின். சிந்தித்தாகிவிட்டது அடுத்தது என்ன என்பீர்கள்தானே!

நடைமுறைப்படுத்துதல்!

சரி, புத்தகத்தை படித்து நிறைய அறிவைப் பெற்றாகிவிட்டது. அது மட்டும் போதுமா என்ன? அறிவே சக்தி என்று நினைத்துவிட்டு சும்மா இருந்தால் எதையும் சாதிக்க முடியாது. கொஞ்சம் சிந்தியுங்கள். செயலாக்கப்பட்ட அறிவே சக்தியாகும். அதுவே வெற்றியையும் கொண்டுவந்துதரும்.

நீங்களாக முயற்சி செய்யாத வரையில் எந்த மாறுதலும் வரப்போவதேயில்லை. செயல் நடவடிக்கை எடுத்தால் வெற்றி கேரண்ட்டியா என்று கேட்பீர்கள். நடவடிக்கை எடுத்தால் வெற்றி கேரண்ட்டியா என்று சொல்ல முடியாது. ஆனால் செயல் நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் எதுவும் நடக்காது என்று மட்டும் கேரண்ட்டீயாய் சொல்ல முடியும் என்ற பஞ்ச் டயலாக்குடன் முடிக்கின்றார் ராபின். முன்னேறத் துடிக்கும் அனைவரும் நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x