

அமெரிக்க குடியுரிமை மற்றும் கிரீன் கார்டு வாய்ப்பு குறித்த கருத்தரங்கு சென்னையில் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் முறையாக இத்தகைய கருத்தரங்கு இலவசமாக நடத்தப் படுகிறது.
இந்த கருத்தரங்கில் அமெரிக்க சுங்கம் மற்றும் குடியேற்ற சேவை மற்றும் குடியேற்ற முதலீட்டாளர் திட்டம் இபி-5 ஆகியவை குறித்து விரிவாக விளக்கப்படும்.
அமெரிக்காவில் சென்று குடியேற மற்றும் முதலீடு செய்ய விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் இந்த கருத்தரங்கில் கிடைக்கலாம். அனுமதி இலவசம் என்றாலும் முன்னதாக 93804 34431 என்ற கைபேசி எண்ணில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பெரும் தொகையை முதலீடு செய்யும் தனி நபர்கள், டாக்டர்கள், சார்டர்ட் அக்கவுன்டென்ட், வர்த்த கர்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இக்கருத்தரங்கு அமையும். சென்னை தியாகராய நகரில் உள்ள ரெசிடென்சி ஓட்டலில் இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது.