

தொழில் துறையினருக்கு நம்பிக்கை அளிக்கும் பட்ஜெட். நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சேவை வரியை உயர்த்துவதன் மூலம் வருமானம் உயரும். இது வளர்ச்சிக்கு ஏற்ற பட்ஜெட் என சென்னை தொழிலக கூட்டமைப்பினர் கூறியுள்ளனர்.
டிடி அசோக், நிர்வாக இயக்குநர் - டெய்லர் ரப்பர்:
வளர்ச்சியை நோக்கி இந்த பட்ஜெட் இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு பத்துக்கு 9 மதிப்பெண் கொடுப்பேன். விவசாய துறைக்கு சில சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இன்பிரா துறைக்கு அதிகம் செலவு செய்வதால், மேலும் முதலீடு உயரும். தனிநபர் விபத்து காப்பீடு பாலிசி என்பது நல்ல விஷயம்.
ஜிஎஸ்டி 2016-ம் ஆண்டு செயல்படுத்தப்படும் என்று அறிவிக் கபட்டிருப்பது வரவேற் கத்தக்கது. நிறைய சாதகமான விஷயங்கள் இருந்தாலும் வருமானத்தை உயர்த்த சேவை வரி அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது.
சி.கே.ரங்கநாதன் - தலைவர் கெவின் கேர்:
விவசாயத் துறைக்கு நிறைய செலவு செய்கிறார்கள். இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுப்பது, கடன் கொடுப்பது உள்ளிட்டவை வரவேற்க தகுந்தது. இஎஸ்ஐ வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருக் கிறது.
அதேபோல ஐடி துறையில் தொழில் தொடங்க நினைப்பவர் களுக்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, இதை தவிர ஐடி துறைக்கு எதுவும் செய்யவில்லை.
ஸ்ரீராம் சுப்ரமணியா, நிர்வாக இயக்குநர் - இண்டெகரா சாப்ட்வேர்:
இந்த பட்ஜெட் சிறப்பாக இருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை, அதே சமயம் மோசமானது என்றும் சொல்ல முடியவில்லை.
முந்த்ரா வங்கி, விவசாயத்துக்கு முன்னுரிமை ஆகியவை நல்ல விஷயங்கள். ஆனால் மேக் இன் இந்தியாவுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கு குறிப்பாக எதுவும் செய்யவில்லை. பெரும்பாலான பலன்கள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இருக்கிறது.