சிங்கப்பூரிலிருந்து அதிக அளவு அந்நிய நேரடி முதலீடு

சிங்கப்பூரிலிருந்து அதிக அளவு அந்நிய நேரடி முதலீடு
Updated on
1 min read

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நேரடி அந்நிய முதலீடுகளில் கடந்த நிதி ஆண்டில் அதிக அளவு முதலீடு சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளது. இதுவரை மொரீஷியஸிலிருந்து அதிக அளவு அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் செய்யப்பட்டது. ஆனால் கடந்த நிதி ஆண்டில் சிங்கப்பூர் அதிக முதலீடுகளைச் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2013-14-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட நேரடி அந்நிய முதலீட்டில் 25 சதவீதம் சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து 598 கோடி டாலர் நேடி அந்நிய முதலீடு சிங்கப்பூரிலிருந்து கடந்த ஆண்டு வந்துள்ளது. மொரீஷியஸிலிருந்து மொத்தம் 485 கோடி டாலர் வந்துள்ளதாக தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (டிஐபிபி) தெரிவிக்கிறது.

சிங்கப்பூருடன் செய்து கொள்ளப்பட்ட இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தமே முதலீடு அதிக அளவில் வந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூருடனான இந்த ஒப்பந்தத்தில் முதலீட் டுக்கான ஆதாயம் (எல்ஓபி) ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததால் முதலீடுகள் பெருகியுள்ளன.

ஜிஏஏஆர் விதிமுறையால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக மொரீஷியஸிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலீ டுகள் குறைந்து போனது. 2006-07-ம் நிதி ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து மிக அதிக அளவிலான அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

கடந்த நிதி ஆண்டில் (2013-14) இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு அளவு 8 சதவீதம் அதிகரித்து 2,430 கோடி டாலரைத் தொட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in