

இந்தியாவின் தர மதிப்பீட்டை உடனடியாக உயர்த்தும் திட்டம் இல்லை என்று சர்வதேச மற்றும் உள்நாட்டு தர மதிப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்திருக் கின்றன. நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் இலக்கினை மேலும் ஒரு ஆண்டுக்கு தள்ளிப் போட்டிருப்பதால் தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்த முடிவினை எடுத்துள்ளன.
இன்னும் 2 வருடத்தில் நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட் டிருந்தது. ஆனால் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த இலக்கை எட்டுவதற்கு மேலும் ஒரு ஆண்டு காலம் ஆகும் என்று தெரிவித்தார்.
அரசாங்கம் நிதிப் பற்றாக் குறையைக் கட்டுப்படுத்து வதைவிட வளர்ச்சியை அதிகப் படுத்த முக்கியத்துவம் கொடுத்தி ருக்கிறது என்று சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ் தெரிவித்திருக்கிறது.
இது ஏற்கெனவே திட்டமிட்ட பாதையில் இருந்து விலகி செல்லும் செயலாகும் என்று இந்தியா ரேட்டிங் ஏஜென்சி தெரிவித்துள்ளது. அதிக நிதிப் பற்றாக்குறையினால் பெரிய பாதகம் இல்லை என்றாலும், கடன் வாங்கும் தொகையை உற்பத்தி அதிகரிப்புக்காக செலவு செய்ய வேண்டும் என்றும் இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
நிதிப் பற்றாக்குறை எண்கள் நாட்டின் தர மதிப்பீட்டை தீர்மானிக்கும் முக்கிய காரணி கள் என்று எஸ் அண் பி மற்றும் மூடி’ஸ் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்த பட்ஜெட் வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட்டாக இருக் கின்றது. அரசு செலவுகளை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி யை அதிகரிக்க திட்ட மிடப்பட்டிருக்கிறது என்று கேர் ரேட்டிங் ஏஜென்சி தெரி வித்திருக்கிறது. மேலும், நிதிப் பற்றாக்குறை குறிப்பிட்ட எல்லையை விட அதிகமாக நியமிக்கப்பட்டிருந்தாலும், அந்த இலக்கை எட்டக்கூடியது என்றும் தெரிவித்திருக்கிறது.