Published : 21 Mar 2015 10:28 AM
Last Updated : 21 Mar 2015 10:28 AM

பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்: ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் உறுதி

தற்போது உள்ள பணப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் எந்த ஒரு விமானமும் செயல்படாமல் இருக்காது என்றும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் ஆறு விமானங்களுக்கான அனு மதியை ரத்து செய்யுமாறு விமான போக்குவரத்து ஆணையத்துக்கு (டிஜிசிஏ) டெல்லி உயர் நீதிமன்றம் இரு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அயர்லாந்தை சேர்ந்த இரு நிறுவனங்களில் இருந்து ஆறு போயிங் ரக விமானங்களை குத்தகைக்கு எடுத்து இயக்கிவந்தது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சரியாக பணத்தை செலுத்தாததால் இந்த நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடின. அதன் அடிப்படையில் டெல்லி உயர்நீதி மன்றம் ஆறு விமானங்களுக்கு அனுமதியை ரத்து செய்தன.

எங்களுடன் பிரச்சினை இருக்கும் இரு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். இருவருக்கும் சுமூக உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் செயல்பாடுகளில் எந்த பிரச்சினையும் வராமல் இருக்க சட்டபூர்வமான தீர்வு களை ஆராய்ந்து வருவதாக வும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்திருக் கிறது.

இந்த பிரச்சினை தற்போது ஏற்பட்டிருப்பது அல்ல. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை அஜய் சிங் வாங்குவதற்கு முன்பு இருந்த பிரச்சினை என்று நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.

2014-ம் ஆண்டு இருந்த சூழல் வேறு, இப்போது இருக்கும் சூழல் வேறு. நிறுவனம் கைமாறிய பிறகு முதல் கட்ட தொகை வந்திருக்கிறது. கடன் செலுத்த வேண்டியவர்களுக்கு படிப்படியாக பணம் கொடுக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அனைத்து வரிகளும் கட்டப் பட்டுவிட்டது, பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது. சில குத்தகைதாரர்களுக்கு பணம் முழுவதும் கொடுத்துவிட்டோம். இன்னும் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். செயல்பாடுகளில் எந்த பிரச்சினையும் இல்லை.

மேலும் சரியான நேரத்தில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியா அளவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x