Published : 02 Mar 2015 04:40 PM
Last Updated : 02 Mar 2015 04:40 PM
கடந்த 2008-09ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது வாக்காளர்களைக் கவர்வதற்காகப் பல சலுகைகளை பட்ஜெட்டில் அறிவித்தார்.
அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தொழிற்துறையினரில் இருந்து தனிநபர் வரை எல்லோருக்கும் ஏதோ ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டிலிருந்தும், அருண் ஜேட்லி தாக்கல் செய்திருகும் பட்ஜெட்டிலிருந்தும் சில முக்கிய அம்சங்கள்:
துறை | ப. சிதம்பரம் ( 2008-09 பட்ஜெட்) | அருண் ஜேட்லி (2015-16 பட்ஜெட்) |
பொதுமக்கள் | # வரி விலக்கு வரம்பு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்வு. # பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு தொகை கூடுதலாக ரூ.15 ஆயிரம் வரை விலக்கு. | # தனிநபர் வருமான வரி மற்றும் வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. # சில பிரிவுகளில் வரி குறைப்பு. |
தொழில்துறை | # நிறுவனங்களுக்கான வரியில் எந்த மாற்றமும் இல்லை. # உற்பத்தியை அதிகரிக்க எல்லா பொருட்களுக்கும் 2 சதவீதம் சென்வாட் குறைப்பு. # பல பொருட்களுக்கு சுங்க வரி குறைப்பு. # சேவை வரி விலக்கு ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்வு. | # நிறுவனங்களுக்கான வரி அடுத்த 4 ஆண்டுகளில் 25 சதவீதமாகக் குறைக்கப்படும். # அடிப்படை சுங்க வரி 12.36 சதவீதத்தில் இருந்து 12. 5 சதவீதமாக உயர்வு. # சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்வு. # உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. # ரூ.20 ஆயிரம் கோடியில் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம். |
சிறுதொழில் | # சிறுதொழில் வளர்ச்சி வங்கிக்கு (சிட்பி) ரூ.4,000 கோடி நிதி. | # சிறு தொழில்களுக்கு உதவ ‘சிறு தொழில் மேம்பாட்டு மறுநிதியளிப்பு முகமை’ (முத்ரா) வங்கி, ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்படும். |
சமூகநலன் | # ராஷ்டிரிய ஸ்வஸ்தியா பீமா யோஜ்னா - வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்கு ரூ.30 ஆயிரம். # ஆம் ஆத்மி பீமா யோஜ்னா - ஏழைகளுக்கு காப்பீடு. | # ஏழைகள் ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால், ‘பிரதம மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்துக்கு விபத்து காப்பீடு. # ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தில் பிரீமியம் தொகையில் 50 சதவீதத்தை அரசு செலுத்தும். |
விவசாயத்துறை | # ரூ.60 ஆயிரம் கோடி கடன் ரத்து செய்யும் திட்டம். # நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி வழங்க ரூ.100 கோடி | # விவசாய கடனுக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. # ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும். |
கீழ்தட்டு மக்கள் | # சம்பளதாரர்களுக்கும் விவசாயிகளுக்கும் சலுகைகள். | # எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT