Published : 27 Mar 2015 10:12 AM
Last Updated : 27 Mar 2015 10:12 AM

இவரைத் தெரியுமா?- அமித் மிதா

டெல் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத் தலைவர். வளரும் நாடுகளுக்கான இயக்குநராகவும் இருக்கிறார்.

2004-ம் ஆண்டில் டெல் நிறுவனத்தின் சீனாவுக்கான கார்பரேட் துணைத் தலைவராக பணிக்குச் சேர்ந்தார்.

லக்னோ எஸ்ஜிஎஸ் இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் தொழில்நுட்பத்தில் பட்டமும், அமெரிக்காவில் மிசௌரி பல்கலைக்கழகத்தில் இண்டஸ்ட்ரியல் இன்ஜீனியரிங் மற்றும் மேலாண்மை அறிவியலில் மேற்படிப்பும் படித்தவர்.

நிறுவனம் ஆன்லைன் மூலம் குறைந்த செலவில் விற்பனை செய்கிறபோதுதான் சப்ளையர்களுக்கான வேலை குறையும் என்று கூறுவார்.

பிக் டேட்டா தகவமைப்பு மேலாண்மை துறை புள்ளி விவரங்கள் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் டெல் கூடுதல் கவனம் செலுத்துகிறது என்று குறிப்பிடுவார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தொழிலை மேலும் விரிவுபடுத்த திட்டம் வைத்துள்ளார்.

அமெரிக்காவுக்கு வெளியே டெல் நிறுவனத்தில் அதிகம்பேர் வேலை பார்ப்பது இந்தியாவில்தான். சுமார் 27,000 பேர் வேலை பார்க்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் அமித் மிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x