

துபாயில் சொகுசு ஹோட்டலைக் கட்ட தாஜ் குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனமான தாஜ் குழுமம் டாடா குழும நிறுவனங்களில் ஒன்றாகும்.
இக்குழுமம் துபாயில் மிகவும் பிரபல சுற்றுலாத் தலமான புர்ஜ் காலிபாவுக்கு அருகில் சொகுசு ஹோட்டலைக் கட்டத் திட்டமிட்டுள்ளது.
மொத்தம் 296 அறைகளைக் கொண்டதாக இந்த சொகுசு ஹோட்டல் அமையும்.
16 ஜூனியர் சூட் மற்றும் 15 சொகுசு சூட்களைக் கொண்டதாக புர்ஜ் காலிபா பார்த்து ரசிக்கும் வகையில் இந்த ஹோட்டல் கட்டப்படுகிறது.