

நடப்பு நிதி ஆண்டில் இந்தியா வின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
லண்டனில் நேற்று முன் தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
இந்தியாவில் வெளிநாட்டவர் கள் தொழில் தொடங்குவதற்கான விதிகளை எளிமைப்படுத்துவது மற்றும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கையில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவில் வரிவிதிப்பு முறையை ஒரே சீராக்கவும், குறை வான வரி விதிப்பு முறையைக் கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிறுவனங்களுக்கு பாதிப்பில்லாத வெளிப்படையான வரி விதிப்பு முறை அமல்படுத்தப்படும். சீர் திருத்தங்களை அமல்படுத்துவதில் சில கொள்கை ரீதியான தடைக்கற்கள் நிலவுகின்றன என்று குறிப்பிட்ட அவர், அதை நீக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன என்றார்.
அரசின் திட்ட இலக்கு தெளிவாக உள்ளது. இப்போதைக்கு அதிக பட்ச முதலீடுகள் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது. அதற்காக இந்தியாவில் தொழில் தொடங்கு வதற்கான விதிகள் எளிமை யாக்கப்படும். இதற்கான வழியில் இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
இந்தியாவின் பொருளாதாரம் மீது நம்பகத் தன்மையை உருவாக்குவதே இந்த அரசின் பிரதான பணி என்று அவர் சுட்டிக் காட்டினார்.
நிதிப் பற்றாக்குறை அளவு குறைந்து வருகிறது. வரி விதிப்பில் காணப்படும் பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்து வருகிறோம். உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். இதற்காக வெளிப்படைத் தன்மையை நிர்வாக ரீதியில் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஜேட்லி கூறினார்.
ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் மறு ஏலம் விடப்பட்டதன் மூலம் அதிக வருவாய் கிடைத்துள்ளது. இவ்விரு ஏல முறைகளிலும் எந்த அளவுக்கு ஊழல் முறைகேடு நடந்துள்ளது என்பதும், அதை இந்த அரசு வெளிப்படுத்தி அரசுக்கு வருவாய் சேர்த்ததையும் சுட்டிக் காட்டினார்.
புதிய அரசு பொறுப்பேற்றதும் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதைக் குறிப்பிட்ட ஜேட்லி, நடப்பு நிதி ஆண்டில் 7.5 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தபோதிலும் வறு மையை முற்றிலுமாக ஒழிப்பது அரசுக்கு மிகப் பெரும் சவாலான விஷயமாக உள்ளது. இருப்பினும் வறுமை ஒழிப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.