

இந்த பட்ஜெட்டில் விவசாயத் துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கருத்து தெரி வித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2015-ம் ஆண்டு சர்வதேச மண் வள ஆண்டாகும். இத்தகைய சூழலில் அரசு மண் வள அட்டைகளை அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் வழங்க உள்ளது.
இந்த நடவடிக்கை சரி விகிதத்திலான மண் வள பெருக்கத்துக்கு உதவும். ஒரே சீரான விலை நிர்ணயத் துக்காக ஒரு தனி நிதியம் உருவாக்கப்பட்டு தொடக்கமாக ரூ. 500 கோடி ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
அதிக நீர்ப்பாசன வசதிகளை உருவாக்குவதற்கான நடவடிக் கைகளும் பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்டுள்ளது.
வேளாண் பொருள்களுக்கான தனி சந்தையை உருவாக்க வேண்டும் என நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைத்தது. இதற்கு முன்பே விவசாயிகளுக்கான தேசிய கமிஷனும் விவசாயிகள் தங்கள் பொருள்களை இந்தியா முழுவதும் சந்தைப்படுத்த ஒரு தனி சந்தை உருவாக்குவதன் மூலம் இடைத்தரகர்களை ஒழிக்க முடியும் என பரிந்துரைத் திருந்தது.
இதேபோல மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குறித்த விஷயத்தில் மறு பரிசீலனை அவசியம் என குறிப்பிட்டிருந்தது. சிறிய விவசாயிகளின் உற்பத்தி பெருகியதில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு முக்கிய பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் குடியரசுத் தலைவர் உரையில் கூறப்பட்ட விஷயங்கள், பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளன.
பாசனத்துக்கெனவும், மண் வளத்தை கண்காணிப்பது மற்றும் மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சூரிய மின் உற்பத்தி ஓரளவு பயனளிப்பதாக இருக்கும். வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் டிஜிட்டல் தொடர்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் கிராமப்பகுதிகளில் திறன் மிக்கவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழியேற்பட்டுள்ளது.
கிராப்புற மேம்பாட்டுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. சிறிய நீர்நிலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 5,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்குக் கிடைக்கும் கடன் அளவு ரூ. 8.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் முத்ரா வங்கி உருவாக்கம் மூலம் சிறிய மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள தொழில் முனைவோருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.
பஞ்சாப்பில் தோட்டக்கலை ஆராய்ச்சி மைய உருவாக்கம், கேரள வேளாண் பல்கலைக் கழகத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் ஊட்டச் சத்துக்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட்டது வரவேற்கத்தக்க விஷயமாகும்.
மொத்தத்தில் பெரும்பாலான மக்கள் நம்பியுள்ள விவசாயத் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் விதமான நடவடிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பி ட்டுள்ளார் சுவாமிநாதன்.