

கடந்த பிப்ரவரி மாதத்தில் கார் விற்பனை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) வெளியிட்ட அறிக்கையில் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1,71,727 கார்கள் விற்பனையானதாக தெரிவித் துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனையான கார் களின் எண்ணிக்கை 1,60,717 ஆகும்.
நுகர்வோர் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே இது உணர்த்துவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
வரும் நிதி ஆண்டில் கார் விற்பனை அதிகரிக்கும் என்பதற்கு இது நல்ல அறிகுறியாக அமைந்துள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பின் பலனாக மார்ச் மாதத்திலும் கார் விற்பனை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்கு அதிக ஒதுக்கீடு பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டிருப்பதன் விளைவாக கிராமப் பகுதிகளில் பணப் புழக்கம் அதிகரிக்கும். இதன் பயனாக இரு சக்கர வாகன விற்பனை பெருகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக எண்ணிக் கையில் கார்களைத் தயாரிக்கும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனை பிப்ரவரி மாதத்தில் 7.25 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 90,728 கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 84,595 கார்களை விற்பனை செய்திருந்தது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை 9.7 சதவீதம் அதிகரித்து 37,163 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 33,875 கார்களை விற்பனை செய்திருந்தது.
ஹோண்டா நிறுவனத்தின் கார் விற்பனை 4 சதவீதம் உயர்ந்து 15,055 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 14,478 கார்களை விற்பனை செய்திருந்தது.
டாடா நிறுவனத்தின் கார் விற்பனை 31 சதவீதம் அதிகரித்தது. மொத்தம் 11,805 கார்களை இந் நிறுவனம் விற்பனை செய்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 9,026 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை மட்டும் 5 சதவீதம் சரிந்ததில் மொத்த வாகன விற்பனை 17,805 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 18,768 கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதத்தில் இரு சக்கர வாகன விற்பனை ஒரு சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 12,08,084 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 12,20,084 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன.
இரு சக்கர வாகன சந்தையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விற்பனை 7.68 சதவீதம் சரிந்ததில் அந்நிறுவனம் 4,07,809 வாகனங் களை விற்பனை செய்திருந்தன.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 4,41,716 ஆகும்.
ஹோண்டா மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் நிறுவன விற்பனையும் 2 சதவீதம் சரிந்தது. மொத்தம் 1,39,233 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 1,42,545 ஆகும்.
பஜாஜ் நிறுவன விற்பனை அதிகபட்சமாக 26 சதவீத அளவுக்கு சரிந்ததில் மொத்தம் 1,15,840 வாகனங்களையே இந்நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 1,56,184 ஆகும்.
மோட்டார் சைக்கிள் விற்பனை சரிந்தபோதிலும் ஸ்கூட்டர்களின் விற்பனை 19 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 3,70,527 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 2,08,573 ஸ்கூட்டர்கள் விற்பனை யாகியிருந்தது.
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன ஸ்கூட்டர் விற்பனை 28 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் 67,442 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 53,153 ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது.
டிவிஎஸ் நிறுவன ஸ்கூட்டர் விற்பனை 34 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் 54,655 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வாகன விற்பனை 40,737 ஆக இருந்தது.
கனரக வாகன விற்பனை 10 சதவீதம் அதிகரித்தது. மொத்தம் 52,843 வாகனங்கள் விற்பனை யாகியிருந்தன.