

நேற்றைய வர்த்தகத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சந்தை மதிப்பை சன்பார்மா விஞ்சியது. இதன் மூலம் அதிக சந்தை மதிப்பு கொண்டு நிறுவனங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தை சன் பார்மா பிடித்திருக்கிறது. எஸ்.பி.ஐ. ஒன்பதாவது இடத்துக்கு சறுக்கியது.
நேற்றைய வர்த்தகத்தில் சன் பார்மா பங்குகள் 1.17 சதவீதம் உயர்ந்து 1041 ரூபாயில் முடிந்தன. இதனால் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,14,210 கோடியாக இருக்கிறது.
எஸ்.பி.ஐ.யின் சந்தை மதிப்பு 0.51 சதவீதம் உயர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இதன் சந்தை மதிப்பு 2,11,130 கோடி ரூபாயாக இருந்தது.
7-வது இடத்தில் இருக்கும் கோல் இந்தியாவின் சந்தை மதிப்பு 2.28 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.