வேளாண் சீர்திருத்தம்: தொழில்துறையினர் வலியுறுத்தல்

வேளாண் சீர்திருத்தம்: தொழில்துறையினர் வலியுறுத்தல்
Updated on
1 min read

வேளாண் சீர்திருத்தம் செய்தாலே பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்று தொழில்துறையினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உணவு பொருள்களின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக பணப்புழக்கத்தைக் குறைக்கும் நோக்கில் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மத்தியில் பொறுப்பேற்க உள்ள புதிய அரசு வேளாண் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் உணவுப் பொருள்களின் விலை குறையும் என்று தொழில்துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

வேளாண் பொருள்களைப் பாதுகாக்க போதிய வசதிகளை செய்ய வேண்டும். கிட்டங்கி, குளிர்சாதன வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் வேளாண் துறையின் போக்கு மாறும் என்று பிஹெச்டி வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சரத் ஜெய்பூரியா குறிப்பிட்டார்.

வேளாண் பொருள்களில் பெரும்பாலானவை விரைவில் அழுகும் தன்மை கொண்டவை. இவை உடனடியாக உபயோகிப்பாளர் கைகளைச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அசோசேம் இயக்குநர் ஜெனரல் டி.எஸ். ரவாத் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in