Last Updated : 25 Mar, 2015 10:25 AM

 

Published : 25 Mar 2015 10:25 AM
Last Updated : 25 Mar 2015 10:25 AM

பிரீபெய்ட் டெபிட் கார்டு: ரயில்வே அறிமுகம்

பயணிகளின் வசதிக்காக ரூபே பிரீபெய்ட் டெபிட் கார்டுகளை ரயில்வே அமைச்சகம் அறிமுகப் படுத்தியுள்ளது. இத்தகைய ரூபே கார்டுகள் மூலம் பயணிகள் தங்களது டிக்கெட்டை முன் பதிவு செய்ய முடியும். மேலும் இதன் மூலம் பொருள்களை வாங்க முடியும். ஐஆர்சிடிசி இத்தகைய வசதியை நேற்று அறிமுகம் செய்தது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் எனப்படும் ஐஆர்சிடிசி நிறுவனம் யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவற்றின் ஒத்துழைப்போடு ஐஆர்சிடிசி யுபிஐ ரூபே டெபிட் கார்டை அறிமுகப்படுத்தி யுள்ளது. வங்கி வாடிக் கையாளர்களை இது ஒருங் கிணைக்கும் என்று அட்டை வெளியீட்டு விழாவில் பேசுகையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு குறிப்பிட்டார்.

ரூபே என்பது இந்தியாவுக்கான தனித்தன்மையுள்ள அட்டை யாகும். இது விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளைப் போல அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகக் கூடியது. மேலும் வங்கிகள் டெபிட் கார்டுக்கு மாற்றாக இதை வழங்கவும் வழி ஏற்பட் டுள்ளது.

பயணிகளின் வசதியை அதிகரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ரயில்வேத்துறை ஆர்வமாக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் வங்கிச் சேவை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் யோசனையை நிறைவேற்ற இது உதவும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அட்டையைப் பெறுவதற்கு யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்படுவோர் ஆன்லைன் மூலம் இதைப் பெறலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஐஆர்சிடிசி ஆன்லைன் மூலமும் இந்த கார்டுகளைப் பெறலாம் என்று அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.கே. மனோச்சா தெரிவித்தார்.

தொடக்கத்தில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு மட்டும் இதைப் பயன்படுத்தலாம். பிறகு படிப்படியாக ஷாப்பிங், கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும் என்றார்.

இந்த அட்டைதாரர்களுக்கு ரூ. 1 லட்சத்துக்கான இலவச விபத்து காப்பீடு அளிக்கப்படும் என்று வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் திவாரி தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும் என்றார்.

இந்த அட்டையில் ரூ. 10 ஆயிரம் வரை ஏற்றிக்கொள்ள முடியும். கேஒய்சி தாக்கல் செய்த வாடிக்கையாளர்கள் ரூ. 50 ஆயிரம் வரை ஏற்றிக்கொள்ள முடியும்.

ஐஆர்சிடிசி-யில் மாதத்துக்கு 5 முறை டிக்கெட் முன்பதிவு செய்ய இலவசமாக இந்த கார்டை பயன்படுத்தலாம். வரை யறுக்கப்பட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x