

பிப்ரவரி 2015 மாதத்துக்கான நுகர்வோர் விலை குறியீடு நேற்று வெளியிடப்பட்டது. பிப்ரவரி மாதத்துக்கான நுகர்வோர் விலைக் குறியீடு 5.37 சதவீதமாக உள்ளது.
இது அதற்கு முந்தைய மாதமான ஜனவரியில் 5.1 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த வருட இதே காலத்தில் 7.88 சதவீதமாக இருந்தது.
தொடர்ந்து மூன்றாவது மாதமாக பணவீக்கம் உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் ஜனவரி மாதத்துக்கான தொழில் உற்பத்தி குறியீடு 2.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய டிசம்பர் மாதத்தில் 1.7 சதவீதமாக இருந்தது.
சந்தை எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே வந்திருக்கிறது. கேபிடல் கூட்ஸ் துறை முடிவுகள் சிறப்பாக இருந்ததால் தொழில் உற்பத்தி குறியீடு உயர்ந்திருக்கிறது.
2012 ஆண்டை அடிப் படையாகக் கொண்டு மாற்றியமைக்கபட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த குறியீடுகள் வெளியிடப்பட்டது.
ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் தொழில் உற்பத்தி குறியீடு 1.7 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் மைனஸ் 0.3 சதவீதமாக இருந்தது.