Published : 04 Mar 2015 10:39 AM
Last Updated : 04 Mar 2015 10:39 AM

இவரைத் தெரியுமா?- சைரஸ் எஸ்.பூணாவாலா

$ உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பூணாவாலா குழுமத்தின் தலைவர். இந்த நிறுவனம் தடுப்பு மருந்து தயாரிக்கிறது.

$ சமீபத்தில் போர்ப்ஸ் தரவரிசைப்படி இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 11 வது இடத்திலும், உலக அளவில் 208வது இடத்திலும் இருக்கிறார்.

$ பிரிஹன் மகாராஷ்டிரா வணிகக் கல்லூரியில் பட்டமும், புனே பல்கலைக் கழகத்தில் பிஹெச்டி பட்டமும் பெற்றவர்.

$ உலக அளவில் நோய் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கிறார்.

$ தரத்தில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்.

$ குதிரை பந்தய ஆர்வம் அதிகம். ஆசிய குதிரை பந்தயக் கூட்டமைப்பின் துணைத் தலைவர். தவிர பல குதிரை பந்தய அமைப்புகளிலும் பொறுப்பு வகிக்கிறார்.

$ பழையக் கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது நாட்டம் அதிகம். விமான சேவை துறையிலும் ஈடுபட்டுள்ளார்.

$ இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, மகாராஷ்டிர அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x