

இந்திய பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 7.4 சதவீத அளவுக்கு வளர்ச்சி அடையும் என்றும் வரும் 2016-17ம் நிதி ஆண்டில் 8.3 சதவீத வளர்ச்சி அடையும் என்றும் ஹெச்.எஸ்.பி.சி. கணித்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் வளர்ச்சி சராசரியாக 7.4 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. இந்த நிலை நடப்பு காலாண்டிலும் தொடரும்.
மேலும் 2015-16-ம் நிதி ஆண்டில் 7.8 சதவீத வளர்ச்சியும், 2016-17-ம் ஆண்டுகளில் 8.3 சதவீத வளர்ச்சியும் அடையும் என்று ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் பிரன்ஜூல் பண்டாரி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்தி ருக்கிறார்.
சீர்திருத்தங்களை ஆரம்பித்திருப்பது, முதலீடுகளை முடுக்கி விடுவது, தேங்கி இருக்கும் திட்டங்களை நடை முறைப்படுத்த ஆரம்பிப்பது ஆகிய காரணங்களால் வளர்ச்சி அதிகரிக்கும் என்றார்.
வரும் மாதங்களில் பணவீக்கம் குறைந்து ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்தி ருக்கும் எல்லைக்குள் வரும். மார்ச் காலாண்டு நடப்பு கணக்கில் பற்றாக்குறை என்ற நிலைமையில் இருந்து உபரி என்ற நிலைமைக்கு மாறும். (தொடர்ந்து 32 காலாண்டு களாக நடப்பு கணக்கு பற்றாக் குறை இருந்தது) வரும் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 0.6 சதவீதமாக இருக்கும் என்றும் ஹெச்.எஸ்.பி.சி. அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி மேலும் 0.25 சதவீத அளவுக்கு வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஹெச்.எஸ்.பி.சி தெரிவித்திருக்கிறது.