

சீனாவில் ஊழியர்களின் சம்பளம் அதிகரித்து வருவதால், உற்பத்தி துறை மையமாக வளர்வதற்கு இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன என்று மத்திய நிதிமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
சீனாவில் பணியாளர்களின் சம்பளம் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதிலும் இந்த நிலைமை இருக்கிறது. அதனால் நாம் சர்வதேச அளவில் தரமான உற்பத்தி துறை நாடாக வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார். புதுடெல்லியில் உள்ள ராம் வணிகவியல் கல்லூரியில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:.
இந்தியாவில் போதுமான அளவுக்கு மனிதவளம், நிறுவனங்கள் என சாதகமான விஷயங்கள் இருக்கும்போது தரமான பொருள்களை உற்பத்தி செய்ய முடியும் என்றார்.
நம்முடைய திறன், தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் போது முதலீடு என்பது ஒரு பிரச்சினையாக இருக்காது. இங்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றை சரி செய்வதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும், இதனால் வறுமையை ஒழிக்க முடியும் என்றார்.
உற்பத்தித் துறையை ஊக்குவிக்க மேக் இன் இந்தியா திட்டத்தை அரசு சமீபத்தில் வெளியிட்டது. நம்முடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபியில்) உற்பத்தி துறையின் பங்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது உற்பத்தி துறையில் மிகவும் நாம் பின் தங்கி இருக்கிறோம் என்றார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு பாரத ரத்னா கொடுத்தது பற்றிய பேசிய அருண் ஜேட்லி, இந்தியாவின் பலமான உறுதியான தலைவர். இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைத்தவர் என்றார் அருண் ஜேட்லி.