

அடுத்த நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாயை டிவிடெண்டாக பெற மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. பட்ஜெட் தகவல்கள் படி நடப்பு நிதி ஆண்டில் ரூ.88,781 கோடி ரூபாய் அளவுக்கு பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து டிவிடெண்ட் கிடைத்திருக்கிறது.
அனைத்து லாபம் ஈட்டும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் குறைந்தபட்சம் 20 சதவீதம் டிவிடெண்ட் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சிறப்பாக செயல்பட்டு லாபம் ஈட்டும் நிறுவனம் சிறப்பு டிவிடெண்ட் அல்லது கூடுதல் டிவிடெண்ட் வழங்க கேட்டுகொள்ளப்பட்டிருக்கிறது.
டிவிடெண்ட் மூலம் ரூ.1,00,651 கோடி திரட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் 36,174 கோடி ரூபாய் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமும், 64,477 கோடி ரூபாய் பொதுத்துறை வங்கிகள் மூலமும் திரட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் திட்டமிடப்பட்டதை விட குறைவாகவே டிவிடெண்ட் வருமானம் வந்திருக்கிறது. 90,229 கோடி ரூபாய் திட்டமிடப்பட்டது, ஆனால் 88,781 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.