

இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளிக்கு விதிக்கப்படும் சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. தற்போது தங்கம் மற்றும் வெள்ளிக்கு 10 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைந்ததைத் தொடர்ந்து 10 கிராம் தங்கத்தின் விலை 375 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இதேபோல ஒரு கிலோ வெள்ளி விலை 512 டாலராக நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படும்.
இம்மாத தொடக்கத்தில் 10 கிராம் தங்கம் 393 டாலராகவும், ஒரு கிலோ வெள்ளி 549 டாலராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தங்கம், வெள்ளிக்கு மட்டும் அரசு நிர்ணயிக்கும் விலை அடிப்படையில்தான் சுங்க வரி விதிக்கப்படும்.