விரைவில் பொதுத்துறை வங்கிகளுக்கான புதிய அமைப்பு

விரைவில் பொதுத்துறை வங்கிகளுக்கான புதிய அமைப்பு
Updated on
1 min read

பொதுத்துறை வங்கிகளுக்கான புதிய அமைப்பு நான்கு மாதத்தில் உருவாக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய அமைப்பின் பெயர் வங்கி இயக்குநர் குழு தனிப்பிரிவு (பிபிபி).

பொதுத்துறை வங்கிகளின் இயக்குநர் குழு நியமனங்கள், ஆலோசனை மற்றும் உத்திகள், வங்கிகள் இணைப்பு, வங்கிகளுக்கு தேவையான நிதி திரட்டும் பணியில் ஆலோசனைகள் இந்த புதிய குழு வழங்கும்.

இந்த புதிய அமைப்பில் 6 இயக்குநர்கள் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகளின் முன்னாள் தலைவர்கள், நிதிச் சேவைகள் பிரிவு நிபுணர்கள் இதில் இடம் பெறுவார்கள்.

தலைவர்கள் நியமனத்துக்கான அமைச்சரவை குழுவின் (ஏசிசி) அனுமதிக்கு பிறகு மூன்று முதல் நான்கு மாதத்தில் புதிய அமைப்பு உருவாக்கப் படும் என்று நிதிச்சேவைகள் பிரிவு செயலாளர் ஹாஷ்முக் ஆதியா தெரிவித்தார்.

இந்த புதிய அமைப்பு குறித்து கடந்த ஜனவரி மாதம் நடந்த கியான் சங்கம் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. கடந்த வாரம் பட்ஜெட்டில் இது குறித்து பேசிய அருண் ஜேட்லி, புதிய அமைப்பு மூலம் பொதுத்துறை வங்கிகள் நிதி திரட்டுவதற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

வரும் 2018-ம் ஆண்டுக்குள் 2.40 லட்சம் கோடி அளவுக்கு பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி தேவைப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in