Published : 06 Mar 2015 10:33 am

Updated : 06 Mar 2015 10:33 am

 

Published : 06 Mar 2015 10:33 AM
Last Updated : 06 Mar 2015 10:33 AM

இவரைத் தெரியுமா?- அபிஷேக் கங்குலி

$ பூமா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். பூமா நிறுவனம் இந்தியாவில் நுழைந்தபோது அதில் சேர்ந்த இரண்டாவது பணியாளர் இவர். ஆரம்பத்தில் இருந்து இயக்குநர் குழுவில் இருந்தவர்.

$ இளங்கலை கணிதமும், லக்னோவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் நிர்வாக பட்டம் பெற்றவர்.


$ 2005 - 2010 வரை பூமா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தை பிரிவின் இயக்குநராக இருந்தார். 2011 ஜனவரியில் விற்பனை மற்றும் சில்லரை வர்த்தக துறையின் துணைத் தலைவர் பொறுப்புக்கு வந்தார்.

$ இதற்கு முன்பு ரீபோக் நிறுவனத்தின் தென் மண்டல இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

$ இந்திய ஏஞ்செல் முதலீட்டாளர் ஒருங்கிணைப்பு உறுப்பினர். விளையாட்டு மற்றும், புதிய தலைமுறை ஊடக முயற்சிகளுக்கு முதலீடு செய்வதற்கு உதவுவதில் ஈடுபாடு காட்டுபவர்.

$ சர்வதேச அளவில் பூமா நிறுவனத்தின் கிரிக்கெட் சார்ந்த வர்த்தகப் பிரிவின் தலைவராகவும் கூடுதலாக பொறுப்பு வகித்து வருகிறார்.



இவரைத் தெரியுமாஅபிஷேக் கங்குலி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x