Published : 25 Mar 2015 10:12 AM
Last Updated : 25 Mar 2015 10:12 AM

இவரைத் தெரியுமா?- ஜிம்மி வால்ஸ்

விக்கிபீடியா நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர். அமெரிக்காவின் இணையதள முதலீட்டாளர்.

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள ஹண்ட்ஸ்வேலியில் 1966ல் பிறந்தவர். அலபாமா பல்கலைக்கழகத்தில் நிதியியலில் இளநிலை பட்டமும், முதுநிலை பட்டமும் பெற்றவர்.

ஆய்வு படிப்பு முடிக்கும் முன்னரே சிகாகோ ஒப்பீனியன் அசோசியேசனில் ஆய்வு இயக்குநராக வேலைக்கு சேர்ந்தார்.

2001 தனது நண்பர் லாரி சன்ஜெருடன் சேர்ந்து விக்கிபீடியா நிறுவனத்தைத தொடங்கினார்.

உலக அளவில் அதிக மக்கள் பார்வையிடும் 5 வது இணையதளமாக விக்கிபீடியாவை உருவாக்கியவர்.

விக்கிபீடியா பவுண்டேஷன் டிரஸ்டியாகவும் இருக்கிறார். 2006-ல் டைம் பத்திரிகை உலகின் 100 செல்வாக்குமிக்க மனிதர்களில் பட்டியலிட்டது. உலக பொருளாதார மன்றம் 2007-ம் ஆண்டில் இளம் சர்வதேச தலைவர் விருது வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x