Published : 24 Mar 2015 10:01 AM
Last Updated : 24 Mar 2015 10:01 AM

இவரைத் தெரியுமா?- ராஜேஷ் கிருஷ்ணன்

பிரிக் ஈகிள் கட்டுமான நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

முதன் முதலில் ஸ்கூலும்பெர்ஜர் ஆயில்பீல்டு நிறுவனத்தின் பொறியாளர் மற்றும் அந்த நிறுவனத்தின் டிரில்லிங் சர்வீஸ் துறையில் மேலாளராக பணியாற்றியவர்.

புதுடெல்லியிலுள்ள ஐஐடியில் பிடெக் படித்தவர். பெல்சில்வேனியாவில் உள்ள வார்ட்டன் மேலாண்மை பள்ளியில் எம்பிஏ நிதியியல் பட்டமும் பெற்றவர்.

கட்டுமான பொறியியல் துறையில் 15 வருடங்கள் அனுபவம் கொண்டவர். வங்கித்துறை, கட்டுமானத்துறை உள்ளிட்டவற்றில் முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவில் உள்ள யுனைடெட் நேசன் விருது வழங்கி சிறப்பித்துள்ளது

பதினைந்து வருடங்களில் இவரது நிறுவனம் 1250 அடக்க விலை வீடு திட்டங்களை மேற்கொண்டிருக்கிறது. சுமார் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் விற்பனை செய்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x