Published : 13 Mar 2015 10:00 AM
Last Updated : 13 Mar 2015 10:00 AM

இவரைத் தெரியுமா?- விவேக் சூட்

$ யுனிநார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. டிசம்பர் 2014 முதல் இந்த பொறுப்பை வகிக்கிறார்.

$ இந்த குழும நிறுவனமான பங்களாதேஷ் கிராமபோன் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இதற்கு முன்பு பணியாற்றியவர். மேலும் யுனிநார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

$ லாபகரமான நிதி மேலாண்மை மற்றும் சந்தையிடுதலில் நிபுணர். கிராமபோன் நிறுவனத்துக்கு 5 கோடி வாடிக்கையாளர்களை உருவாக்கினார்.

$ டாடா ஏஐஜி லைப் இன்ஷூரன்ஸ், ஹட்சிசன் டெலிகாம், டப்பர்வேர் இந்தியா, ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனங்களில் 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

$ டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனப் பட்டமும் பெற்றவர்.

$ யுனிநார் நிறுவனத்துக்கு திரும்புவதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டவர் நிறுவனத்தை வருமானம் ஈட்டும் உறுதியான இடத்துக்கு நகர்த்திச் செல்ல விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x