Published : 18 Mar 2015 10:33 AM
Last Updated : 18 Mar 2015 10:33 AM

அந்நிய நேரடி முதலீடு 448 கோடி டாலர்

ஜனவரி மாத அந்நிய நேரடி முதலீடு 448 கோடி டாலராக இருக்கிறது. கடந்த 29 மாதங்களில் இல்லாத அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு உயர்ந்திருக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 467 கோடி டாலர் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு முதலீடு வந்திருப்பது இப்போதுதான்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 218 கோடி டாலர் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு இருந்தது. ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 36 சதவீதம் முதலீடு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 1,874 கோடி டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு இப்போது 2,552 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது.

இதில் டெலிகாம் துறை அதிக முதலீடுகளை பெற்றிருக்கிறது. இந்த 10 மாத காலத்தில் 283 கோடி டாலர் முதலீட்டையும், சேவை துறை 264 கோடி டாலர், ஆட்டோமொபைல் துறை 204 கோடி டாலர் அளவுக்கு முதலீட்டையும் பெற்றிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் மொரீஷியசில் இருந்து 766 கோடி டாலர், சிங்கப்பூரில் இருந்து 526 கோடி டாலர், நெதர்லாந்தில் இருந்து 313 கோடி டாலர், ஜப்பானில் இருந்து 161 கோடி டாலர் மற்றும் அமெரிக்காவில் இருந்து 158 கோடி டாலர் முதலீடு வந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x