

இந்தியாவில் உள்ள வங்கிகளின் சொத்து மதிப்பு உயர்வதற்கும் அவற்றின் செயல்பாடு மேம்படவும் சிறிது காலம் ஆகும் என்று தரச்சான்று நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்கித் துறை வளர்ச்சி அதிகரித்து கடன் வழங்கும் அளவு அதிகரிக்க வேண்டுமானால் கட்டமைப்பு மற்றும் சுரங்க விவகாரங்களில் நிலவும் முட்டுக்கட்டைகள் நீங்க வேண்டும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
நிறுவனங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்துவது சகஜ நிலைக்கு வர வேண்டுமெனில் சந்தையில் அந்நிறுவன பொருள் களுக்கான தேவை அதிகரிக்க வேண்டும். நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கை மேம்பட்டு லாப மீட்ட வேண்டுமெனில் கட்டமைப்பு மற்றும் உலோகம் தவிர சுரங்கத் தொழில்களில் நிலவும் முட்டுக்கட்டைகள் நீங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவையனைத்தும் நிகழ்வதற்கு சிறிது காலம் ஆகும். எனவே வங்கி களின் செயல்திறன் மேம்பட சிலகாலம் பிடிக்கும் என அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் துறைகள் தேக்க நிலையிலிருந்து மீண்டு கடன் பெறுவது அதிகரிக்கும் போதுதான் வங்கிகளின் வாராக் கடன் அளவு குறையும். இத்தகைய மாற்றம் நிகழ சில காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தங்களை கொண்டு வர விரும்பும் அரசு, வட்டி விகித குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்வதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
நடப்பு நிதி ஆண்டு இறுதியில் வங்கியின் கடன் வழங்கும் அளவு 13 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள வங்கிகளில் மூலதன அதிகரிப்பு மிகவும் சிக்கலான விஷயமாகும். இருப்பினும் பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் தனியார் வங்கிகளின் மூலதனம் திருப்திகரமாக உள்ளது. இதனால் தனியார் வங்கிகள் பேசல்-3 தகுதியை எட்ட முடியும்.
நடப்பு நிதி ஆண்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 7,940 கோடி மூலதன அதிகரிப்புக்கு ஒதுக்கப்படும் என அரசு தெரிவித் துள்ளது. கூடுதல் நிதித் தேவையை பொதுச் சந்தையில் வங்கிகள் திரட்ட வேண்டியிருக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.