

பெரும்பாலான இந்திய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓ) தங்களது தொழில் வளர்ச்சி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (பிடபிள்யூசி) நிறுவனம் நடத்திய ஆய்வில் இதை தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் கலந்துகொண்ட இந்திய சிஇஓ-க்களில் 62 சதவீத சிஇஓ-க்கள் குறுகிய காலத்தில் தங்களது தொழில் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்திருக் கின்றனர்.
84 சதவீத அதிகாரிகள் வரும் ஆண்டுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், 71 சதவீத தலைவர்கள் மூன்று வருடங்களில் வளர்ச்சி நிச்சயம் இருக்கும் என்றும் தெரிவித் திருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தலைவர்களுக்கு இப்போதைய பெரும் பிரச்சினை தகுதி வாய்ந்த பணியாளர்கள் இல்லாதது என்றும் பிடபிள்யூசி அறிக்கை தெரிவிக்கிறது.
பல்வேறு உள்நாட்டு விவகாரங்கள் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.