Published : 05 Mar 2015 10:19 AM
Last Updated : 05 Mar 2015 10:19 AM

ஆராதனா ஜோக்ரி - இவரைத் தெரியுமா?

# மத்திய அரசின் பங்கு விலக்கல் துறைச் செயலாளர். 1980 ஆண்டு உத்திர பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரி.

# பங்கு விலக்கல் துறைக்கு முன்பு, மருந்துகள் துறை இயக்குநராகவும், குடும்ப நலத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்.

# சுகாதாரத் துறையில் 15 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உண்டு. உலக அளவில் சுகாதாரம், மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு தொடர்பான ஆய்வு மாநாடுகளில் கலந்து கொண்டு பல்வேறு ஆய்வு கட்டுரைகள் தாக்கல் செய்துள்ளார்.

# அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், லக்னோ பலகலைக்கழகத்தில் வரலாறு முதுகலைப் படிப்பும், ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

# பங்கு விலக்கல் மூலம் அடுத்த நிதியாண்டில் ரூ.69,500 கோடி எட்டுவது என்கிற அரசின் இலக்கு சாத்தியமே என்று கூறியுள்ளார். பங்கு விலக்கல் துறை தொடர்ச்சியாக திட்டமிட்ட வகையில் இயங்கினால் பங்கு விலக்கல் வேகமாக நடக்கும் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x