

பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசின் பங்கை குறைத்துக் கொள்வது தொடர்பான நடவடிக் கைகளை அரசு தீவிரமாக அமல் படுத்தி வருகிறது.
அரசின் பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் 2015-16ம் ஆண்டு ரூ.41,000 திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் வரும் நிதி ஆண்டு தொடக்கத்தில் பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) பங்குகள் விலக்கிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்கு விலக்கல் மூலம் ரூ. 3,200 கோடி நிதி திரட்ட உள்ளது.
இது குறித்து கூறிய பங்கு விலக்கல் துறை அதிகாரிகள் இந்த பங்கு விலக்கம் குறித்த அறிவிப்புகள் முடிந்துவிட்டன என்றும், பெல் நிறுவனப் பங்கின் நடப்பு விலை ரூ.260.70 என்று கணக் கிட்டு 12.23 கோடி பங்குகள் விற் பனை செய்யப்பட உள்ளது என்றும் தெரிவித்தனர்.