

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு உயர்வு குறித்து தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம் செய்தி குறிப்பு வெளியிட்டிருக்கிறது.
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு கடந்த டிசம்பரில் அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. ஆனால் இந்த அவசரச் சட்டம் கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேறவில்லை.
இதனைத் தொடர்ந்து இந்த செய்திக் குறிப்பினை வெளியிட்டிருக்கிறது தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சகம். காப்பீட்டு துறையில் 26 சதவீத அந்நிய முதலீடுக்கு எந்த அனுமதியும் தேவை இல்லை.
26 சதவீதத்துக்கு மேல் முதலீடு செய்யப்படும் பட்சத்தில் மத்திய அரசின் அனுமதி வழியாக இருக்க வேண்டும் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.