

2013-ம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து ரூ. 4 லட்சம் கோடியைத் திரட்டியுள்ளன. கடன் பத்திர வெளியீடு உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் மூலம் இத்தொகை திரட்டப்பட்டுள்ளது. தங்களது நிறுவன தேவைகளுக்காக இந்தத் தொகை திரட்டப்பட்டுள்ளது. ஐபிஓ மற்றும் எப்பிஓ மூலம் திரட்டப்பட்டுள்ளன. இது தவிர மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் மூலமும் திரட்டப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை மூலம் இத்தொகை திரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனங்கள் விரிவாக்கப் பணிக்காக இத்தொகையை திரட்டியுள்ளன. கடன் சந்தை மூலம் ரூ. 3.10 லட்சம் கோடி திரட்டப்பட்டுள்ளது. பங்குச் சந்தை மூலம் ரூ. 87 ஆயிரம் கோடி திரட்டப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை விருப்ப பங்கு ஒதுக்கீடு மூலம் திரட்டப்பட்டதாகும்.
கடன் சந்தையில் ரூ. 2.65 லட்சம் தொகை திரட்டப்பட்டுள்ளது. இது தவிர ரூ. 23,745 கோடி மாற்ற இயலாத கடன் பத்திர வெளியீடு மூலம் திரட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு கடன் பத்திர வெளியீடு மூலம் திரட்டப்பட்ட தொகை ரூ. 19,650 கோடியாகும்.
இந்தியாவில் கடனுக்கான வட்டி விகிதம் அதிகம். இதைக் கருத்தில் கொண்டே நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து திரட்டியுள்ளன. இதனால் இந்நிறுவனங்களின் பங்கு விலைகள் 2014-ல் உயர வாய்ப்பிருப்பதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புத்தாண்டில் பங்குச் சந்தை வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இணையதள தேடுபொறி சேவை நிறுவனமான ஜஸ்ட் டயல் நிறுவனம் கடந்த மே மாதத்தில் பங்கு வெளியீடு மூலம் ரூ. 927 கோடி திரட்டியது.
பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் எப்பிஓ வெளியீடு மூலம் ரூ. 5,400 கோடி திரட்டியது. பொதுப் பங்கு வெளியீட்டுக்கு நிறுவனங்கள் தயக்கம் காட்டியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆஃபர் பார் சேல் (ஓஎப்எஸ்) மற்றும் நிறுவன ஒதுக்கீடு திட்டம் (ஐபிபி) ஆகியன மூலம் திரட்ட உத்தேசித்துள்ளன. பங்குச் சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்கள் இந்த வழிகளின் மூலம் 25 சதவீத அளவுக்கு திரட்ட அனுமதிக்கப்படுகின்றன.
2013-ம் ஆண்டில் பங்கு விற்பனை திட்டம் மூலம் ரூ. 30,270 கோடி திரட்டப்பட்டது. இதில் ஓஎப்எஸ் மற்றும் ஐபிபி மூலம் ரூ. 23,245 கோடி திரட்டப்பட் டுள்ளது. 34 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ. 1,628 கோடியை திரட்டியுள்ளன. 2013-ம் ஆண்டில் 70 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ. 23,245 கோடியை திரட்டியுள்ளன. இதில் என்டிபிசி ரூ. 11,469 கோடியும், ஆயில் இந்தியா ரூ. 3,145 கோடியும், செயில் ரூ. 1,516 கோடியும் திரட்டின.
இது தவிர ரூ. 40,620 கோடி தொகை நிறுவன மேம்பாட்டாளர்களுக்கு நிதி ஒதுக்கிய வகையில் திரட்டப்பட்டது. மொத்தம் 20 நிறுவனங்கள் க்யூஐபி மூலம் ரூ. 22,350 கோடியைத் திரட்டின. 34 உரிமப் பங்கு வெளியீடு மூலம் ரூ. 4,100 கோடி திரட்டப்பட்டது. முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலை அடிப்படையில் இந்தப் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.