

ஐரோப்பிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு வேலையளிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் டாடா குழுமத்தின் அங்கமான டிசிஎஸ் திகழ்கிறது.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த சிறப்பை டிசிஎஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சேவையளிக்கும் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் எதிர் பார்ப்புகளுக்கேற்ப செயல்படும் நிறுவனமாக டிசிஎஸ் திகழ் கிறது.
சர்வதேச அளவில் இந்நிறுவ னத்தின் 3,18,000 பணியாளர்கள் மிகச் சிறந்த சேவையை அளிப்ப தாக டிசிஎஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் செயல் படும் 688 நிறுவனங்களில் டிசிஎஸ் முதலிடத்தில் உள்ளதாக இதன் சர்வதேச மனிதவள ஆற்றல் துறையின் செயல் துணைத் தலை வர் அஜய் முகர்ஜி தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகள் தவிர லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்க நாடுகளிலும் சிறந்த நிறுவனமாக டிசிஎஸ் திகழ்வதாக சிறந்த வேலையளிக்கும் நிறுவன மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேவிட் பிங்க் தெரிவித்தார்.