ஸ்மார்ட்போன் விற்பனையால் ஏசி விற்பனை பாதிப்பு

ஸ்மார்ட்போன் விற்பனையால் ஏசி விற்பனை பாதிப்பு
Updated on
1 min read

புதிய பொருள்களின் வரவு அதே துறையைச் சேர்ந்த பழைய தொழிலை அழித்துவிடும் என்பது கேள்விப்பட்ட ஒன்றுதான். செல்போன் வந்தபோது அதற்கு முன்பிருந்த பேஜர் எனும் கருவியை முற்றிலுமாக அழித்துவிட்டது.

ஆனால் இப்போது ஸ்மார்ட்போன்களின் வருகை ஏசி விற்பனையை பாதித்துள்ளதாக புளூஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீடுகளில் தங்களது வருவாயில் பெரும்பகுதியை ஸ்மார்ட்போன்கள் வாங்குவதில் செலவிடுவதால் ஏசி வாங்க வேண்டும் என்ற சிந்தனை குறைந்துபோயுள்ளதாக புளூ ஸ்டார் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு இயக்குநர் பி. தியாகராஜன் தெரிவித்தார்.

ஸ்மார்ட்போன்கள் வாங்குவது என்பது தொடர் செலவு பிடிக்கும் விஷயமாகும். பொதுவாக ஒரு ஸ்மார்ட்போன் 18 மாதங்கள் வரை உழைக்கும். அதற்குப் பிறகு வாடிக்கையாளர்களே புதிய போன் வாங்க ஆர்வமாகிவிடுகின்றனர். இதனால் ஸ்மார்ட்போன் விற்பனை சந்தை எப்பொழுதும் சிறப்பாகவே உள்ளது.

சீனாவில் 5 கோடி மக்களில் 25 சதவீதம் பேர் ஏசி வாங்குகின்றனர். ஆனால் இந்தியாவில் ஏசி-க்களின் ஆண்டு விற்பனை வெறும் 37 லட்சமாக உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மொத்தம் 14.70 கோடி செல்போன்கள் விற்பனையாகி யுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in