

நுகர்பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாபர் நிறுவனம் டெட்ரா பாக்கெட்டில் இளநீரை அடைத்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் ரியல் ஆக்டிவ் பிராண்ட்டில் இளநீர் விற்பனை செய்யப்படும். முதல் கட்டமாக இளநீர் விற்பனை டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழச்சாறு விற்பனையை மேலும் விரிவுபடுத்தப் போவதாக நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுத் தலைவர் பிரவீண் ஜெய்புரியா தெரிவித்தார்.