

அதானி குழுமத்துக்கு கடன் வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித் திருந்தது. ஆஸ்திரேலியாவில் சுரங்க திட்டத்துக்காக 100 கோடி டாலர் தொகைக்கு எஸ்.பி.ஐயிடம் விண்ணப்பித்திருந்தது அதானி குழுமம்.
கடன் விண்ணப்பம் பரிசீலனை யில் உள்ளது. கடன் வழங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்க வில்லை. கூடிய விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த நவம்பர் மாதம் பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த இரு நிறுவனங் களுக்கு இடையே ஏற்பட்டது.
400 கோடி ரூபாய்க்கு கடன் வழங்குவதாக இருந்தால் வங்கித் தலைவர் தலைமையிலான கமிட்டி கூடி விவாதித்த பிறகுதான் முடி வெடுக்கப்படும். ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உர்ஜித் படேல் இந்த கமிட்டியில் இருக்கிறார்.