உற்பத்தி வரி உயர்வால் கார் விற்பனை மந்தம்

உற்பத்தி வரி உயர்வால் கார் விற்பனை மந்தம்
Updated on
1 min read

கார்களுக்கு அளித்து வந்த உற்பத்தி வரிச் சலுகையை மத்திய அரசு திரும்பப் பெற்றதால், ஜனவரி மாதத்தில் கார் விற்பனை மந்தமடைந்தது. மாருதி சுஸுகி மற்றும் ஹுண்டாய் நிறுவன கார்கள் விற்பனை ஒற்றை இலக்க வளர்ச்சியை எட்டின. அதேசமயம் ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு ஆகி நிறுவனங்களின் விற்பனை சரிந்தது.

டாடா மோட்டார்ஸ், ஹோண்டா கார்களின் விற்பனை இரட்டை இலக்க அளவுக்கு உயர்ந்தன.

மாருதி சுஸுகி கார்களின் ஜனவரி மாத விற்பனை 9.3 சதவீதம் அதிகரித்து 1,05,559 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன கார்களின் விற்பனை 96,559 ஆக இருந்தது.

ஹூண்டாய் நிறுவனம் 4.1 சதவீத வளர்ச்சி எட்டியதால் ஜனவரி மாத விற்பனை 34,780 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 33,405 ஆகும்.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன விற்பனை 16 சதவீதம் சரிந்ததில் 4,667 கார்களே விற்பனையாகியிருந்தது. கடந்த ஆண்டும் இந்நிறுவன 5,557 கார்களை விற்பனை செய்திருந்தது. மஹிந்திரா நிறுவன தயாரிப்புகள் 8 சதவீத சரிவைச் சந்தித்தன. இந்நிறுவனம் ஜனவரி மாதம் 37,045 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த ஆண்டில் இது 40,324 ஆக இருந்தது.

போல்ட் மற்றும் ஜெஸ்ட் கார்களை அறிமுகப்படுத்திய டாடா நிறுவனம் 18 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தது. இந்நிறுவனம் 13,047 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த ஆண்டு இது 10,974 ஆக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in