இவரைத் தெரியுமா?: பவுல் பால்மேன்

இவரைத் தெரியுமா?: பவுல் பால்மேன்
Updated on
1 min read

$ யுனிலீவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

$ 2009-ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ நெதர்லாந்தில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் குரோனிகெனில் இளநிலை பட்டமும், சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் 1979-ல் எம்ஏ, பொருளாதாரம் மற்றும் எம்பிஏ சர்வதேச சந்தையியல்/ நிதியியல் சார்ந்த முதுநிலை பட்டமும் பெற்றவர்.

$ 1979-ல் பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். 2001ல் அந்த குழுமத்தின் தலைவராகவும் உயர்ந்தார்.

$ 2005-ல் நெஸ்ட்லே நிறுவனத்தில் இணைந்து முதன்மை நிதி அதிகாரி, துணைத் தலைவர் போன்ற பதவிகளில் பணியாற்றினார்.

$ உலகப் பொருளாதார மன்றத்தின் உறுப்பினர், குளோபல் கன்ஸ்யூமர் குட்ஸ் மன்றத்தின் இயக்குநர் குழு, யுஎன் குளோபல் காம்பக்ட் இயக்குநர் குழு என பல பதவிகளில் இருந்து வருகிறார்.

$ 2010ம் ஆண்டிலிருந்து டவ் கெமிக்கல் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருக்கிறார்.

$ அட்லாண்டிக் கவுன்சில் விருது, சி.கே.பிரகலாத் விருது, தி குளொபல் சேஞ்ச் விருது, ஐரோப்பிய தொழில் தலைவர் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in