Last Updated : 17 Feb, 2015 11:01 AM

 

Published : 17 Feb 2015 11:01 AM
Last Updated : 17 Feb 2015 11:01 AM

ரூ.1,200 கோடிக்கு அமெரிக்க நிறுவனத்தை வாங்குகிறது இன்போசிஸ்

இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனமான இன்போசிஸ் அமெரிக்காவின் பனயா நிறுவனத்தை வாங்குகிறது. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி மேலும் வலுவடையும் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்டோமேஷன் தொழில்நுட்ப நிறுவனமான பனயாவை 20 கோடி டாலர் மதிப்புக்கு கையகப்படுத்துகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ. 1,200 கோடியாகும்.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இன்போசிஸ் நிறுவனம் மேற்கொள்ளும் இரண் டாவது மிகபெரிய கையகப்படுத்தும் நடவடிக்கை இது. 2012 ம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்தின் லேட்ஸ்டோன் என்கிற ஆலோசனை நிறுவனத்தை ரூ.1,932 கோடிக்கு வாங்கியது இன்போசிஸ். புதுமை மற்றும் புதுப்பித்தல் சார்ந்த உத்திகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

மேலும் போட்டிகளை சமாளிப்பதற்கும் வாடிக்கையாளர் சேவைகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த் துவதற்கும் இந்த நடவடிக்கை அவசியம் என்று கூறியுள்ளது. நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விஷால் சிக்கா பொறுப்பேற்றதற்கு பிறகு நடைபெறும் முதல் கையகப் படுத்தும் நடவடிக்கை இதுவாகும்.

இந்த கையகப்படுத்துதல் குறித்து பேசியுள்ள விஷால் கிக்கா, பனயாவை கையகப்படுத்துவதன் மூலம் புதுப்பித்தல் மற்றும் இன்போ சிஸ் நிறுவனச் சேவைகளில் வித்தியாசத்தையும் கொண்டு வர முடியும் என்று கூறியுள்ளார்.

இந்த கையகப்படுத்தும் நடவடிக் கை மார்ச் 31 க்குள் முடிந்துவிடும் எனத் தெரிகிறது. இதன் மூலம் எங்கள் பணியாளர்களின் திறமை யை மேலும் மேம்படுத்த முடியும் என்றும், எங்களது வாடிக்கையாளர் சேவைகளை மேலும் சிறப்பாக செய்ய உதவும் என்றும் சிக்கா கூறியுள்ளார். எங்கள் வாடிக்கை யாளர்களிடமிருந்து நாங்கள் சவால்களை எதிர்கொள்கிறோம். எனவே அதை நிவர்த்தி செய்ய முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.

அமெரிக்காவின் பனயா நிறுவனம் ஆட்டோமேஷன் துறை சார்ந்த நிறுவனமாகும். இது ரிஸ்க்கான தவறுகளை சரிசெய்ய உதவுகிறது. செலவுகளைக் கட்டுப்படுத்துவது, குறுகிய காலத்தில் வாடிக்கை யாளர்களுக்கு சேவை செய்வ தற்கு உதவி செய்யும். இந்த கையகப்படுத்துதல் இன்போசிஸ் நிறுவனத்துக்கு பயன் தரக்கூடியது.

கையிருப்பை நிறுவனம் சரியாக பயன்படுத்துகிறது என்று ஏஞ்செல் புரோக்கிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு துணைத்தலைவர் சரப்ஜித் கோர் நன்கரா தெரிவித்தார். இந்த கையகப்படுத்துதல் குறித்து தெரிவித்துள்ள கிரே ஹாண்ட் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் அதிகாரி சன்ஜித் நடுத்தர அளவிலான இந்த நடவடிக்கை இன்போசிஸ் நிறுவனத்துக்கு புதிய முகம் கொடுக்கலாம். மேலும் பணியாளர்களை வலுப்படுத்தவும் உதவும் என்று குறிப் பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x