

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் 11.68 கோடி ரூபாய் நஷ்டமடைந்திருக்கிறது. சென்னையைச் சேர்ந்த இந்த நிறுவனம் கடந்த வருடம் இதே காலாண்டில் 42 லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் அடைந்திருக்கிறது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1037 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 1040 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் நிகர நஷ்டம் 7.15 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 5.29 கோடி ரூபாயாக நிகர நஷ்டம் இருந்தது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 3,410 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த வருடம் இதே காலத்தில் 3,372 கோடி ரூபாயாக இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 12.24 சதவீதம் உயர்ந்து 106.80 ரூபாயில் முடிவடைந்தது.