

தொழிற்பேட்டைகளுக்கு ஒதுக்கப்படும் நிலங்களில் 25 சதவீதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க திட்டமிட்டு வருவதாக தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்தார். இந்திய தலித் தொழில் மற்றும்வர்த்தக சபையின் (டிஐசிசிஐ) மூன்று நாள் வர்த்தக கண்காட்சி தொடக்க விழாவில் இவ்வாறு இவர் தெரிவித்தார்.
மேலும், டிஐசிசிஐ உறுப்பினர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் கொடுக்கப்படும் என்றார். தெலுங்கானா தலைநகரில் இருக்கும் அனைத்து வர்த்தக நிறுவனங்களும், கடைகளும் ஞாயிறு அன்று செயல்படும். இதற்கான முடிவு சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும், விரைவில் இது முறையாக அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன், சிறு மற்றும் குறு நிறுவனங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் 20 சதவீதம் கொள்முதல் செய்தாக வேண்டும் என்னும் உத்தரவு ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட தொழில்முனைவோரிடமிருந்து 4 சதவீதம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதியும் இருப்பதாக மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.