

ஒவ்வொரு தருணத்திலும் கார்தான் என்னைத் தேர்வு செய்கிறது. அந்த வகையில் என்னிடம் இருக்கும் பிஎம்டபிள்யூ 320 ஸ்போர்ட்ஸ் கார் இப்போது என்னோட பேவரிட்.
கார் வாங்க போகும் போதும் கூட முதலில் ‘ஆடி’ கார்தான் என்று திட்டமிட்டுப் போனேன். இந்தக் காரை எடுத்து சில மைல் தூரம் ஓட்டிப் பார்த்ததும் ரொம்பவே பிடித்துவிட்டது. உடனே எனக்குப் பிடித்த வெள்ளை நிற பிஎம்டபிள்யூவை வாங்கி வந்துவிட்டேன்.
அப்போதுதான் காரை நாம் தேர்வு செய்வதில்லை. கார்தான் நம்மைத் தேர்வு செய்கிறது என்று எண்ணத்தோன்றியது.
எனக்கு நிம்மதியைக் கொடுக்கக்கூடிய இரண்டு, மூன்று விஷயங்களில் கார் பயணமும் ஒன்று.
இரவு 11.30 மணிக்கு மேல் காரை எடுத்து மிதமான வேகத்தோடும், இளையராஜா பாடலோடும் திரிபவன் நான். அந்த சுகம் அனுபவித்தால் மட்டுமே சுகம்.