

ஓ.என்.ஜி.சி.யின் இயக்குநர் (தொழில்நுட்பம்) ஷசி சங்கர் பணியிடை நீக்கம் செய்வதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது பணியிடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. 54 வயதாகும் இவர், நிறுவ னத்தின் இளைய இயக்குநராவார். கடந்த வருடம் பிப்ரவரி 1-ம் தேதி இயக்குநராக நியமிக்கப்பட்டார். என்ன காரணத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து முழுமையாக தெரியவில்லை.
ஆனாலும் ஏலம் முறை கேட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து முழுமையான விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.