கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அலுவலகம் ஜப்தி: எஸ்பிஐ

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அலுவலகம் ஜப்தி: எஸ்பிஐ
Updated on
1 min read

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத் துக்கு சொந்தமான மும்பையில் உள்ள அலுவலகத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கையகப் படுத்தியது. வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் பாக்கியை வசூ லிப்பதற்காக இந்த நடவடிக் கையை வங்கி எடுத்துள்ளது.

செல்வாக்கு மிக்க நபர்களிடம் வங்கிகள் இனியும் தயவு, தாட்சண்யம் காட்டாது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

வங்கிக்கு திரும்ப செலுத்த வேண்டிய கடன் தொகையில் ஓரளவாவது மீட்கலாம் என்கிற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் மிகவும் முக்கியமான பகுதியில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகம் உள்ளது. இந்த கட்டடம் அதன் நிறுவனர் விஜய் மல்லைய்யாவுக்குச் சொந்த மானதாகும். அது இப்போது எஸ்பிஐ வசமாகியுள்ளது.

இந்த கட்டடம் மொத்தம் 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் பிரதான அலுவலகங்கள் சில இயங்கி வந்தன. இந்த அலுவலகத்தை ஜப்தி செய்யலாம் என மும்பை தலைமை மெட்ரோபாலிடன் நீதிபதி அளித்த உத்தரவின் அடிப்படையில் எஸ்பிஐ நேற்று முன்தினம் இந்த கட்டடத்தைக் கையகப்படுத்தியது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறு வனம் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கி களுக்கு மொத்தம் ரூ. 7 ஆயிரம் கோடி கடன் நிலுவை வைத்துள் ளது. இந்த கட்டடத்தைக் கைப் பற்றியதன் மூலம் குறைந்த பட்சம் ரூ. 2 ஆயிரம் கோடியாவது கிடைக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

சமீப காலத்தில் பொதுத்துறை வங்கி மிகப் பெரும் அரசியல் செல்வாக்கு மிக்க நபருக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது இதுவே முதல் முறை யாகும். நீண்ட காலக் கடனை வசூலிப்பதில் வங்கிகள் தீவிரமாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உறுதியாக உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in